எதிர்வரும் புதன் (30/8/2017) அன்று அனைத்துலக காணாமல்போனோர் தினம் பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன்பாக அனுட்டிக்கப்படவுள்ளது.
குறித்த இந்நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் புதன் மாலை 4 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான அழைப்பிதழ்களை நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் பிரித்தானிய வாழ் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.