வவுனியா மூன்றுமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி வவுனியா தெற்கு வலயகல்வி அலுவலகத்திற்கு முன்பாக பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒருவருடமாக குறித்த பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படாமையினால், கல்வி மற்றும் ஏனைய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று பெற்றோர் தெரிவித்தனர்.
”மாகாணம் என்னசெய்யிறது, வலயம் என்னசெய்யிறது,கிராமபுற பாடசாலைகளுக்கு கல்வி இல்லையா, ஒரு வருடமாக நேர்முகத் தேர்வு நடைபெறுகிறதா, எமது பாடசாலைக்கு அதிபரை நியமி, மாணவர்களின் கல்வியை பாதிப்படையச்செய்யாதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் தாங்கியிருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டகல்வி அதிகாரியிடம் மனு ஒன்றையும் கையளித்தனர்.
