Tuesday, September 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அதிகாலையிலேயே சென்று வாக்களியுங்கள் ; க.மகேசன் மக்களிடம் கோரிக்கை

August 4, 2020
in News, Politics, World
0

அதிகாலையிலேயே சென்று வாக்களிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளைய தினம் இடம்பெறவுள்ள தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன.

இன்று காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளும், சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களும் தேர்தல் மத்திய நிலையத்திலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 584 வாக்காளர்களும், கிளிநொச்சி நிர்வாக மட்டத்தில் 92 ஆயிரத்து 264 வாக்காளர்களும் என மொத்தமாக யாழ். தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர்வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.

அதேபோன்று யாழ். நிர்வாக மாவட்டத்தில் 508 வாக்களிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 107 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தமாக 615 வாக்களிப்பு நிலையங்கள் யாழ். தேர்தல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று வாக்கெண்ணும் நிலையங்களை பொறுத்தவரையிலே சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களாக யாழில் 73 நிலையங்களும், கிளிநொச்சியில் 14 நிலையங்களும் என மொத்தமாக 103 வாக்கெண்ணும் சாதாரண நிலையங்களும் அதேபோல் 16 தபால் மூல வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 7 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.

அதற்காக 330 பேர் போட்டியிடுகிறார்கள் 19 அரசியல் கட்சிகளும், 14 சுயேச்சைக் குழுக்களை சேர்ந்த 33 கட்சிகளும் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் தேர்தல் கடமைகளுக்கென 8235 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த தடவை விசேடமாக சுமார் 450 உத்தியோகத்தர்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான பணியில் அமர்த்தியுள்ளோம்.

இந்த தேர்தலில் சுகாதார நடைமுறைகளையும் அதனுடைய வழிகாட்டல்களையும் பின்பற்றி மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு காணப்படுவதன் காரணமாக அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் அதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல் மாற்றுத்திறனாளிகள் அந்த இடத்திற்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளும் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் நேரகாலத்துடன் சென்று தங்களுடைய வாக்குகளை அளிக்க வேண்டும். சுகாதார நடைமுறை மற்றும் சமூக இடைவெளியை பேணி முகக்கவசம் அணிந்து வாக்களிக்க முடியும்.

26 வாக்களிப்பு நிலையங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுகாதார நடைமுறையை பின்பற்றுவதற்காக மேலதிகமாக சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களும், சுகாதார உத்தியோகத்தர்களும் அங்கே நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது பொதுச் சுகாதார பரிசோதகர் இந்த நடைமுறையினை செயல்படுத்தவுள்ளார்.

வாக்காளர்கள் எந்த பயமுமின்றி தங்களுடைய வாக்குரிமையை செயல்படுத்த முடியும். அதற்குரிய சுகாதார நடைமுறைகள் சம்பந்தமான விடயங்கள் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளன.

5ஆம் திகதி வாக்களித்து முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகள் தேர்தல் மத்திய நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு 6ஆம் திகதி காலை 7 மணியளவில் வாக்கெண்ணும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

நெடுந்தீவு பகுதி வாக்குப்பெட்டி வழமைபோன்று வான் மார்க்கமாக கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையினை தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

அதேபோல ஏனைய தீவு பகுதிகளுக்கான வாக்குப் பெட்டிகளும் கடற்படையின் உதவியுடன் எடுத்து வருவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.

இந்தமுறை தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே அனைத்து மக்களையும் அதிகாலையிலேயே சென்று வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post

முடிவுகள் வெளியாகும் முன்னர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர புதிய வேலைத்திட்டம்

Next Post

மகளை கொலை செய்த தந்தைக்கு மரணதண்டனை

Next Post

மகளை கொலை செய்த தந்தைக்கு மரணதண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures