கல்வித்துறை சார்ந்த சில உத்தியோகத்தர்கள் தமக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளுக்கான கல்வி உரிமைகளை மீறுவதாக தேசிய கல்வி ஊழியர் சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளது.
சில உத்தியோகத்தர்கள் பாடசாலையை மூடுமாறு அதிபர்மாருக்கு அழுத்தம் தொடுத்திருக்கிறர்hகள் என்று தேசிய கல்வி ஊழியர் சங்கம் தெரிவிததுள்ளது.
பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாமென ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்கள். இதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரேமசிறி ரத்னாயக்க தெரிவித்தார்.
