பஸ் கட்டணம் 21.85 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது..
இன்று நள்ளிரவு முதல் பஸ்கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40 ரூபா வரை அதிகரிக்கப்படுகின்றது.
பஸ் கட்டண தேசிய கொள்கைக்கு அமைய, ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாம் திகதி பஸ் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரையான 7 மாத காலப் பகுதியில் 5 தடவைகள் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரையான காலம் வரை 87 சதவீதத்தினால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.