Saturday, August 30, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அதிகபட்ச அதிகாரப்பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமை | சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம்

August 29, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குக : சஜித்

தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதாகும். புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை 13 ஆவது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மதத் தலைவர்கள், பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து முறையாக கருத்துக்களைப் பெற்று, தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி / ஐக்கிய மக்கள் கூட்டணி அர்ப்பணிப்புடன் உள்ளது.

இந்த செயல்முறையில், எமது கொள்கை என்னவெள்றால்  தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதாகும்.

முடிவெடுக்கும் செயல்முறையில் குடிமக்களை செயலில் ஈடுபடுத்த, கிராம அரசு மற்றும் நகர அரசு எனப்படும் சமூக அடிப்படையிலான ஜனநாக நிறுவனங்கள் உருவாக்கப்படும். 

புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை 13 ஆவது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

அரசியலமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒரு தலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதுடன், மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம். 6 மாதங்களுக்குள் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும். 

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு, அவற்றின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவோம்

பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும்

சட்டவிரோதமாக காலம் தாழ்த்தப்பட்டுள்ள உள்ளுராட்சி தேர்தல்களை விரைவாக நடத்த தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நாளாந்தம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்

நீதித்துறை நிர்வாகத்தில் நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டைத் தடுக்க சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதுடன்இ நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் செயல்திறனை நிறுவ தேவையான சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

தோட்டத் தொழிலாளர்களை காணிக்குச் சொந்தமான சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான அரசாங்கக் கொள்கையை அறிமுகப்படுத்தி அமுல்படுத்துவதோடு, தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு முறையான சம்பளம் உறுதிப்படுத்தப்படும்

வரிசையின்றி விரைவாக கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்க, ஒவ்வொரு செயலகத்திலிருந்தும் பெற முடியும் என்பதை உறுதி செய்ய அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களும் இலங்கை அரசாங்க வலையமைப்புடன் இணைக்கப்படும்.

தொழில் வல்லுநர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பும் நியாயமற்ற வரிக்கட்டமைப்பை மாற்றியமைப்போம்.

அரச காணிகளில் வசிக்கும் காணி அனுமதி பெற்றவர்களுக்கு 5 ஆண்டுகளுக்குள் உறுதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இலவச பொதுப் போக்குவரத்து வசதிகளை வழங்கப்படும் என்று அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக பார்வையிட

https://cdn.virakesari.lk/uploads/medium/file/260844/Samata_Jayak_Sajith_manifesto_Tamil_.pdf
Previous Post

தமிழர்களின் ஒற்றுமைக்கு தமிழ் பொது வேட்பாளர் ஒரு ஆரம்ப புள்ளி: தமிழர் விடுதலை கூட்டணி

Next Post

இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Next Post
இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures