தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அதர்வா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ தணல் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தணல்’ எனும் திரைப்படத்தில் அதர்வா , லாவண்யா திருப்பாதி, ஷா ரா, அழகம் பெருமாள்,போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அன்னை பிலிம் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். ஜோன் பீற்றர் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 12-ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் எக்சன் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருப்பதால்… படத்தைப் பற்றிய நேர் நிலையான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.