Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அண்ணனுக்கு தம்பி தரும் 39 ஆயிரம் கோடி!!

December 29, 2017
in News, Politics, World
0

உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள முகேஷ் அம்பானி தனது தம்பி அனில் அம்பானிக்கு ரூ.23,000 கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறார்.

உலக பணக்காரர் வரிசையில் இடம் பெற்றிருந்த இந்திய கோடீசுவரர் தீருபாய் அம்பானி. இவரது மறைவுக்குப் பிறகு மகன்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் சொத்துக்களை பிரித்துக்கொண்டனர். இருவரும் தனித்தனியாக பலவேறு தொழில்களில் ஈடுபட்டு தொடர்ந்து முன்னணி பணக்காரர்கள் வரிசையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) பலவித சிக்கல்களை சந்தித்தது. இதையடுத்து அனில் அம்பானி, தனது ஸ்பெக்ட்ரம், மொபைல் கோபுரங்கள், ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பனை செய்து கடன் சுமையை குறைக்க திட்டமிட்டார்.

இது குறித்து அவர், “பெருகிவரும் இழப்புக்களால் ஆர்.காம் நிறுவனம் 2 ஜி மற்றும் 3 ஜி வயர்லெஸ் சேவை .2016 டிசம்பரில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கடந்த 2009-10-ம் ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடியாக இருந்த கடன், தற்போது 45 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து நஷ்டத்தில் இயங்கும் நிறுவன சொத்துக்களை விற்பனை செய்ய இருக்கிறேன். இதனால் 2018 ஜனவரி முதல் 2018 மார்ச் மாதத்திற்குள் மொத்த கடன் சுமை 85 சதவீதமாக குறையும் தொலைதொடர்பு உள்கட்டமைப்பை தவிர, இந்நிறுவனம் புதுடில்லி,, சென்னை, கோல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்களையும் விற்க திட்டமிட்டுள்ளோம்” என்று அறிவித்தார்.

இந்த நிலையில் அனில் அம்பானி விற்க திட்டமிட்டிருக்கும் சொத்துக்களை தானே வாங்கிக்கொள்வதாகவும் அதற்காக 39,000 கோடி ரூபாய் அளிப்பதாகவும் அண்ணன் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

வர்த்தக உலகின் ஆகப்பெரும் நடவடிக்கை இது என்று பொருளாதார நிபுரணர்கள் கணிக்கிறார்கள். அம்பானி சகோதரர்களிடையே சொத்துக்கள் குறித்து சர்ச்சைகள் இருந்ததும் பிறகு அவை தீர்க்கப்பட்டதும் வரலாறு.

ஆனாலும் சகோதரனுக்கு கைகொடுக்க முன்வந்திருக்கிறார் முகேஷ் அம்பானி.

தானாடாவிட்டாலும் தசை ஆடும் என்பது இதைத்தானோ!

Previous Post

அடுத்த வருடத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களுக்கு புதிய நடைமுறை

Next Post

அதிமுகவை உடைத்தது குருமூர்த்திதான்! தங்கத்தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

Next Post

அதிமுகவை உடைத்தது குருமூர்த்திதான்! தங்கத்தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures