அணுவாயுதங்கள் சகிதம் கூட்டாக இராணுவப் பயிற்சிகளில் ஈடுபடுவது குறித்து அமெரிக்காவும் தென் கொரியாவும் கலந்துரையாடி வருகின்றன.
அணுவாயுதங்களைக் கொண்ட வட கொரியாவின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக இது குறித்து ஆராயப்படுவதகா தென் கொரிய ஜனாதிபதி ய_ன் சுக் யோல் தெரிவித்துள்ளார்.
தென் கொரிய பத்திரிகையான சோசுன் இல்போவுக்கு அளித்த செவ்வியில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
‘அணுவாயுதங்கள் அமெரிக்காவுக்கு சொந்தமானவை. ஆனால், திட்டமிடல், தகவல் பரிமாற்றம் மற்றும் பயிற்சிகள் ஆகியன கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தென் கொரிய ஜனாதிபதி ய_ன் சுக் யோல் தெரிவித்துள்ளார்.