அணித்தலைவர் பொறுப்பில் இருந்து அலாஸ்டர் குக் விலகல்
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து அலாஸ்டர் குக் விலகியுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் அணித்தலைவராக இருந்தவர் அலாஸ்டர் குக்.
இதுவரையிலும் 59 போட்டிகளுக்கு தலைமை தாங்கியவர் 2012-ம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் வீரர் விருதையும், 2013-ம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் கேப்டன் விருதையும் வென்றுள்ளார்.
சிறந்த அணித்தலைவராக விளங்கிய குக்-க்கு எதிராக சமீபகாலமாக விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு காரணம் இந்தியாவுக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது தான்.
இதனை தொடர்ந்து அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக குக் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து அணியின் அணித்தலைவராக கடந்த 5 ஆண்டுகளாக நீடித்ததை நினைத்து பெருமை கொள்கிறேன்.
அணித்தலைவராக இல்லை என்றாலும் அணியில் நீடிப்பேன், வரவிருக்கும் தலைவருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என தெரிவித்துள்ளார்.
குக் விலகியதை தொடர்ந்து ஜோ ரூட் அணித்தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.