Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

“அடுத்த மாதம் துணை கலெக்டராக பதவி ஏற்பார் சிந்து!!

July 30, 2017
in Sports
0
“அடுத்த மாதம் துணை கலெக்டராக பதவி ஏற்பார் சிந்து!!

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பெருமையை உலகுக்குச் சொன்னவர் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஆந்திரப் பிரதேச மாநிலம் சார்பாக குரூப்-1 பிரிவில், துணை கலெக்டராகப் பதவியேற்கும் அரசாணையை, கடந்த வெள்ளிக்கிழமை, முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார். இந்த அரசாணையைப் பெற்றுக்கொண்ட பி.வி.சிந்து, “இந்த நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் என் கடமையைத் தொடர்ந்து செய்வேன்” என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.

21 வயதாகும் சிந்து, தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உதவி மேலாளராக இருக்கிறார். ரியோ ஓலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அப்போது, மூன்று கோடி ரூபாய் ரொக்கப் பணமும் அமராவதி பகுதியில் ஒரு குடியிருப்பு வீடும், மாநில அரசுத் துறையில் குரூப் – 1 பிரிவில் அரசு வேலையும் வழங்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்திருந்தது. அதேபோல, தெலங்கானா மாநிலம் சார்பில், ஐந்து கோடி ரூபாய் ரொக்கப் பணமும், ஒரு வீடும் வழங்கப்பட்டது. ஆனால், பி.வி.சிந்து ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். அதனால், ஆந்திரப் பிரதேச மாநில அரசு அளித்த அரசு வேலையை ஏற்றுக்கொண்டார். துணை கலெக்டராக பி.வி.சிந்து பதவியேற்றதும், சிறப்பு முதன்மை செயலாளர் (வருவாய்த் துறை) மன்மோகன் சிங் தலைமையில், மூன்று வருடம் பயிற்சி மேற்கொள்வார்.

இதுபற்றி சிந்துவின் அம்மாவிடம் தொடர்புகொண்டு கேட்டோம். “இது மிகவும் நெகிழ்வான தருணம். சிந்துவின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்பும் கிடைத்த அங்கீகாரமாக இதைப் பார்க்கிறோம். அவள் குழந்தையாக இருக்கும்போதே, சின்னச் சின்ன விஷயங்களைக்கூட அக்கறையோடு செய்வாள். அவள் விளையாடும்போது எதையும் விளையாட்டாக எடுத்துக்க மாட்டாள். அவளைப் பத்தி, அவளிடம் யாராவது குறை சொன்னால், அதைச் சரிசெய்துக்கொள்வாள்.

நெருக்கடியான நேரங்களில் அவள் ரொம்ப அமைதியாக இருப்பதைப் பார்த்திருக்கேன். விளையாட்டுல அவள் காட்டிய தீவிரத்துக்கு கிடைச்ச பரிசுதான் எல்லாமே. அடுத்த மாதம் துணை கலெக்டராக பதவியேற்பாள். செப்டம்பர் மாதம், ஆல் இந்திய சீனியர் ரேங்கிங் பேட்மின்டன் போட்டி தொடங்குகிறது. அதற்காக, பேட்மின்டன் பயிற்சியில் கவனம் செலுத்திவருகிறாள். பி.வி.சிந்துவின் அடுத்த இலக்கு, 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஓலிம்பிக்ஸ் போட்டிதான். இந்தப் போட்டியில் அவர் தங்கம் வெல்வார் என்று நம்புகிறோம்” என்றார்.

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கம் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. கடந்த பிப்ரவரி மாதம், இந்தியன் ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் போட்டியில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரின் என்பவரைத் தோற்கடித்து, உலகப் பெண்கள் பேட்மின்டன் தரவரிசையில், இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், 2015-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2013-ம் ஆண்டு அர்ஜூனா விருதும் பெற்றிருக்கிறார் பி.வி.சிந்து.

பெண்களுக்கு விளையாட்டுத்துறையில் பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் சிந்து. மற்ற விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் பெண்களை அவ்வபோது ஊக்குவிக்கும் விதமாக, சமீப காலமாக, கால்பந்து, மகளிர் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளைக் குறித்து தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆர்வமுடன் பதிவிட்டுவருகிறார்.

Previous Post

கோவையை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!

Next Post

பிக்பாஸ் அலையில் இந்த மேட்சை நீங்கள் மிஸ் செய்தீர்களா?

Next Post
பிக்பாஸ் அலையில் இந்த மேட்சை நீங்கள் மிஸ் செய்தீர்களா?

பிக்பாஸ் அலையில் இந்த மேட்சை நீங்கள் மிஸ் செய்தீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures