எதிர்வரக்கூடிய மாகாணசபைத்தேர்தலில் தற்போதைய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்
மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் முதலைச்சர் தான் இரண்டு வருடத்தில் பதவி விலகுவதாக கூறியிருந்த நிலையில் தொடர்ந்தும் அவர் பதவி வகித்து வருவதாகவும் மீண்டும் அவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பது என்பது சாத்தியப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

