ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவேதான் என பிரதி அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சரத் பொன்சேகாவை களமிறக்க முடியும் என்றால், மைத்திரிபால சிறிசேனவை களமிறக்க முடியும் என்றால், ஏன் கட்சியிலுள்ள பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக தீர்மானிக்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுத்தால், பிரதமரும் அதனை ஏற்றே ஆக வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

