அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் குற்ற பின்னணி உடைய 1,581 எம்பிக்கள் வாக்களிக்க உள்ளனர். இது அதிர்ச்சி தரும் தகவலாகும்.
ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தனித் தனி வேட்பாளரை நிறுத்தியுள்ளன. இதனால் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கு இந்த 2 நாள்களே உள்ள நிலையில் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற அமைப்பானது ஒரு ஆய்வை நடத்தி அதில் அதிர்ச்சிகர தகவலையும் அளித்துள்ளது. இந்த ஆய்வில் பெண் வாக்காளர்கள் எத்தனை பேர், குற்றபின்னணி கொண்டவர்கள், பணக்காரர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை கொடுத்துள்ளதுஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ள 4,852 எம்பி, எம்எல்ஏக்களில் 1581 பேர், அதாவது 33 சதவீதத்தினர் குற்ற பின்னணி உடையவர்கள். கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.