Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

அடுத்தடுத்து வெற்றிப் படங்களை குவிக்கும் பிரபு திலக்கின் புதிய படம்!

July 24, 2021
in Cinema, News
0
அடுத்தடுத்து வெற்றிப் படங்களை குவிக்கும் பிரபு திலக்கின் புதிய படம்!

பல்வேறு களங்களில், தரமான படைப்பாக, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற “வால்டர், பாரிஸ் ஜெயராஜ்” போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் 11:11 Production Dr. பிரபு திலக் அவர்கள். தற்போது இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவரது “பார்டர்” படத்தை தனது நிறுவனம் மூலம் வெளியிடவுள்ளார். ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை குவித்திருக்கும் இப்படம், வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்தாக தற்போது N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் “யாவரும் வல்லவரே” எனும் புதிய படததை வழங்கவுள்ளார். இப்படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு இணைந்து நடிக்க, அவரக்ளுடன் தமிழின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

11:11 Production சார்பில் Dr. பிரபு திலக் இது குறித்து கூறியது…

“வால்டர், பாரிஸ் ஜெயராஜ்” படங்களின் பிரமாண்டமான வெற்றி, தரமான படைப்புகளை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள், என்கிற நம்பிக்கையையும், மேலும் சிறந்த கதைகள் கொண்ட படங்களை உருவாக்கும் ஊக்கத்தையும் தந்துள்ளது. மேலும் எங்கள் நிறுவனத்தின் மூலம் வெளியகும், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பார்டர்” படத்தின் முன் வெளியீட்டு பணிகளுக்கு, ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த உற்சாக தருணத்தில் எங்களின் அடுத்த படைப்பாக “யாவரும் வல்லவரே” படத்தை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். ஹைப்பர்லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது.

இயக்குநர் N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி திரைக்கதையை கூறியபோது அவரது ஐடியாவும் படம் குறித்த பார்வையும் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். மேலும் கதையில் எதிர்பாராத பல திருப்பங்களும், கதையின் போக்கில் அவிழும் பல முடிச்சுகளும் இப்படத்தை பெரிய திரையில் காணும் என் ஆர்வத்தை அதிகப்படுத்தின. உடனடியாக இப்படைப்பில் இணைய ஒப்புகொண்டதற்கு இது தான் முதன்மை காரணம். இது தவிர சமுத்திரகனி, யோகி பாபு போன்ற திறமை மிக்க நடிகர்களுடன் இணைந்து நடிக்கவுள்ள தமிழின் முன்னனி நட்சத்திரங்கள் இப்படத்தை ஒரு உயர்ந்த படைப்பாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

சமுத்திரகனி மற்றும் யோகி பாபு ஆகியோருடன், நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவராசு, போஸ் வெங்கட், மெயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நாதகுமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், மற்றும் தேவ தர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழுவில் Jais (ஒளிப்பதிவு), N.R. ரகுநந்தன் (இசை), ராம் ROA (படத்தொகுப்பு), பொன் முதுவேல், தீபச்செல்வன், ஆதிராய் (பாடல்கள்), GV.பிரகாஷ்குமார், N.R. ரகுநந்தன், பத்மலதா, மற்றும் லிஜேஷ் குமார் (பாடகர்கள்) ஆக பணியாற்றுகின்றனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிக்கும் யாவரும் வல்லவரே

Next Post

வெளிநாடு வாழ் தமிழர் நல துறையை அமைக்க வேண்டும்: மு க ஸ்டாலின்

Next Post
ஈழத் தமிழர் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்ய வேண்டும்

வெளிநாடு வாழ் தமிழர் நல துறையை அமைக்க வேண்டும்: மு க ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures