மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்திச் சபையின் ஆலோசனையில் வட மாகாண சபை பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நடைமுறைக்கு அமைய ‘தகிர்தபுரவர’ செயல் திட்டத்தின் கீழ் மன்னாரில் புதிய பேருந்து நிலையங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மன்னாரில் நடைபெறவுள்ளன.
மன்னார் நகரில் மேற்கொள்ளப்பட இருக்கும் இந்த நவீன புதிய பேருந்து நிலையங்களுக்கான அடிக்கல் நடும் விழா எதிர்வரும் வெள்ளிக் கிழமை மாலை மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது என மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.

