முல்லேரியா, வெலிவிட்ட பகுதியில் பாதாள உலககுழு உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அசிதா ஹேமதிலகே என்று அழைக்கப்படும் ‘சோல்டா’ என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
அவர் அங்கொட லொக்காவின் கும்பலின் முக்கிய துப்பாக்கிதாரி என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மீது கைக்குண்டு வீச முயன்றபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

