நடிகர் உதயா நடிப்பில் வெளியான அக்யூஸ்ட் திரைப்படம் – இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி தான் என அப்படத்தின் நாயகனும், நடிகருமான உதயா தெரிவித்திருக்கிறார்.
ஜேசன் ஸ்டுடியோஸ்- சச்சின் சினிமாஸ்- ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன் – மை ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் கடந்த ஓகஸ்ட் முதல் திகதியன்று வெளியான திரைப்படம் ‘அக்யூஸ்ட்’.
இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களின் பேராதரவுடன் படமாளிகையில் தொடர்ந்து வெற்றிகரமாக நடைப்போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் அக்யூஸ்ட் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர்.
இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன்- அழகன் தமிழ்மணி – சௌந்தர் – ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
நடிகர் ஏ. எல். உதயா பேசுகையில், ” இந்தப் படம் வெளியாகி மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதே.. மிகப்பெரிய வெற்றி தான். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இது கடவுளின் ஆசீர்வாதம் தான். ” என்றார்.