அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சலோட்டப் போட்டி இன்று ஆரம்பமாகிறது.
கல்வி அமைச்சும் ஊவா மாகாண கல்வித் திணைக்களமும் நெஸ்லே லங்கா நிறுவனமும் இணைந்து ஒழுங்கு செய்த அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சலோட்டப் போட்டி பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகும்.
எதிர்வரும் புதன்கிழமை இந்தப் போட்டி நிறைவு பெறும். அனைத்து மாகாணங்களிலும் இருந்து 7 ஆயிரத்து 800 மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர். பல வயதெல்லைகளின் கீழ், 38 போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

