தமிழர் தாயகம் எங்கும் காலை 11 மணிக்கு இரு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை முன்வைத்திருந்தபோதும், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்த முதன்மை நினைவேந்தல் நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்படவில்லை.
வடக்கு மாகாண சபை மே 18 தமிழின அழிப்பு நாளை துக்க தினமாக அறிவித்திருந்தது. இதற்கு அமைவாக பாடசாலைகளில் வடக்கு மாகாண சபைக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கல்வி அமைச்சர் கோரியிருந்தார்.
ஆனால் வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தின் கொடி, காலையில் முழுக் கம்பத்தில் பறந்தது. இது தொடர்பில் இணையத் தளங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் தகவல் வெளியானது. இதன் பின்னர் காலை 8.45 மணியளவில் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

