வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார் சூப்பர் சிங்கர் புகழ் சயித்
முன்பெல்லாம் சின்னத்திரைக்கும், வெள்ளித்திரைக்கும் பெரிய இடைவேளை இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் வெள்ளித்திரையில் ஜொலிக்கும் பல பேர் சின்னத்திரையில் இருந்து வந்தவர்களாக தான் இருக்கிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் என பலரை கூறலாம்.
தற்போது இவர்களின் வரிசையில் வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார் சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சியின் போட்டியாளர் சயித் சுபாஹன்.
வெருளி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மைக் கதையை மையமாகக் கொண்ட படமாம். இந்த படத்தில் தான் அறிமுகமாக இருக்கிறார் சயித்.