ரஜினியின் கபாலி படத்துக்கு நாளை பஸ்ட் ரிலீஸ்
ரஜினி கபாலி எல்லா படத்தின் எதிர்ப்பார்ப்பையும் மறக்க வைத்துவிட்டது. அடுத்து என்ன படம் வருகிறது என்றால் எல்லோருக்கும் நியாபகத்தில் இருப்பது கபாலி படம் தான்.
தற்போது இப்படம் நாளை ( ஜுன் 29 ) தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. நான்கு பேர் முன்னிலையில் இப்படம் முதன்முதலாக திரையிடப்பட இருக்கிறது.
மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் வரும் ஜுலை 15ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது, ஆனால் படக்குழுவினரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.