முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசம் பயன்படுத்துவதை தடை செய்யுமாறு பொலிஸ் திணைக்களத்தினால் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருவர் முன்வைத்திருந்த எதிர்ப்பு மனு, மனுதாரர்களினாலேயே வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.
நேற்று (04) குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக் கவச தடைச் சட்டத்தை கைவிட்டு, தரமான பொருத்தமான தலைக்கவச உற்பத்திக்கான பரிந்துரைகளை பொலிஸார் முன்வைத்துள்ளனால், இவ்வழக்கை வாபஸ் வாங்குவதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வேண்டுகொளின் பேரில், குறித்த வழக்கிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பொலிஸார் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் மீண்டும் அந்த தடைச் சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என்ற உரிமையுடன் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.