Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மிகவிரைவில் இலங்கையில் இராணுவ ஆட்சி மலரும்

March 4, 2020
in News, Politics, World
0
மிகவிரைவில் இலங்கையில் இராணுவ ஆட்சி மலரும்

மிகவிரைவில் இலங்கையில் இராணுவ ஆட்சி மலரும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துக் கூறிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான அடித்தளத்தை அமைத்திருகின்றார் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் ராஜபக்சவினரது நோக்கத்தை நிறைவேற்றவே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட அவர், அதற்காக கட்சிக்குள் எவரும் இடமளிக்கக்கூடாது என்றும் கோரினார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு தலைமை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வர வேண்டும் என்ற அழைப்பையும் அவர் இதன்போது முன்வைத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த 107 நாட்களாக நாட்டைப் ரச்சினைக்குள் சிக்கவைத்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

ஒரு புறம், குறுகிய காலத்துக்குள் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச உறவுகளை முழுமையாக இல்லாதொழித்து, இந்த நாட்டின் தமிழ், சிங்கள மக்களை ஒன்றிணைப்பதற்கான செயற்பாடுகளை ஜனாதிபதி புறந்தள்ளியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச கடந்த தேர்தல் காலத்தில், அவர் சார்பானவர்களுக்கே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், இராணுவ ஆட்சியொன்றை நாட்டில் உருவாக்குவதற்கான திட்டங்களை முன்னெடுக்கின்றார்.

அதனைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான ஓர் அபாயமான நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில், அதிலிருந்து மீளும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து, இராணுவ ஆட்சியை இல்லாதொழிப்பது அவசியமாகும்.

இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக அனைத்து அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமை வகிக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கீழ் சஜித் பிரேமதாஸவை பிரதமர் வேட்பாளராகவும், கூட்டணியின் தலைவராகவும் தெரிவு செய்து செயற்படுகின்ற நிலையில், சில தரப்பு ராஜபக்ச தரப்பின் நோக்கத்தை நிறைவேற்ற செயற்படுகின்றது.

ஆகவே, நாம் விசேடமாக இதனை எதிர்க்கக்கூடிய ஒரு அமைப்பை பலப்படுத்த வேண்டுமெனின், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும்.

ஒற்றுமையைப் பலப்படுத்துவது எனப்படுவது யாரையும் விரட்டுவது அல்ல, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவசியம்; அதேபோல் இந்த நாட்டு மக்கள் கோரும் சஜித் பிரேமதாசவும் அவசியம்.

அதனைவிட அனைத்துத் தரப்பினதும் ஒத்துழைப்பு அவசியம். இந்த நாட்டின் மரபுரிமையே ஐக்கிய தேசியக் கட்சி. ஆகவே, பிரிந்து செல்லாது, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

மக்கள் சின்னத்தைப் பார்த்து வாக்களிப்பதில்லை. அந்தச் சின்னத்தைக் கொண்டுள்ள தரப்பின் கொள்கை மற்றும் நபர்களுக்கே மக்கள் வாக்களிக்கின்றனர்.

மக்களை ஏமாற்றும் ராஜபக்ச ஆட்சியை தோற்கடிக்க நாம் ஒன்றிணைய வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

கடமைகளை விட்டு சஜித் பிரேமதாச நேற்று வெளியேறினார்

Next Post

இன்று மாலை அவசரமாக சந்தித்து பேசவுள்ள இலங்கை தமிழரசு

Next Post

இன்று மாலை அவசரமாக சந்தித்து பேசவுள்ள இலங்கை தமிழரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு

July 18, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான தமிழருக்கு 15 வருடங்களுக்கு பின்னர் கிடைத்தது பிணை

July 18, 2026
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அவிரா’!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அவிரா’!

July 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures