திருகோணமலை-மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட ரொட்டவெவ கிராமத்தில் நியாப் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பல்தேவைக்கட்டிடம் மக்களுக்கு பயன்படுத்தப்படாத கட்டிடமாக காணப்படுவதாக கிராமமக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
ரொட்டவெவ அஸ்மி பாலர் பாடசாலை வீதியில் 10 வருடங்களுக்கும் மேலாக நியாப் திட்டத்தின் ஊடாக மக்கள் கூட்டங்களை நடாத்துவதற்கும்- கற்பிணி பெண்கள் சாய்சாலைகளை நடாத்துவதற்கும் இலகுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடம் இன்று
காடுகள் வளர்ந்து அக்கட்டிடத்திற்குள் சமூக சீர்கேடுகள் இடம் பெற்று வரும் நிலையில் மாற்றம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மொறவெவ பிரதேச செயலகத்தினூடாக வருடாவருடம் புனரமைப்பு பணிகளுக்காக வேண்டி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும் அரச நிதி ஒதுக்கப்பட்டு புனரமைக்கபட்டு போதையர்களின் மடமாகவும்-சமூக சீர்கேடுகள் இடம் பெறும் கட்டிடமாகவும் இந்த பல் தேவை கட்டிடம் மாறி வருவதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
மொறவெவ பிரதேச செயலகத்தினூடாக இக்கட்டிடம் பெறப்பட்டு கிராமத்தில் கற்பிணி பெண்களின் சாய்சாலைகளை நடாத்துவதற்கோ அல்லது பொது கூட்டங்களை நடாத்துவதற்கோ கிராமத்திலுள்ள பொது அமைப்புக்களுக்கு வழங்கி மக்களுக்கு பயன்படும் விதத்தில் இக்கட்டிடம் மாற்றப்பட வேண்டுமெனவும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரொட்டவெவ கிராமத்திலுள்ள புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.