புகழ் பெற்ற ரொறொன்ரோ பல்கலைக்கழக விஞ்ஞானி Ursula Franklin 94 வயதில் காலமானார்.

புகழ் பெற்ற ரொறொன்ரோ பல்கலைக்கழக விஞ்ஞானி Ursula Franklin 94 வயதில் காலமானார்.

கனடா-Ursula Franklin, பிரபல்யமான ரொறொன்ரோ பல்கலைக்கழக பேராசிரியர் பெண்ணியவாதி, சமாதான ஆர்வலர் மற்றும் அழிவிலிருந்த உயிர் பிழைத்தவர். வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 94.
இவர் ரொறொன்ரோ நர்சிங் ஹோம் ஒன்றில் பல வருடங்களாக அவரின் கணவருடன் வசித்து வந்தார் என இவரது மூத்த மகன் மார்ட்டின் விராங்லின் தெரிவித்தார்.
நர்சிங் ஹோமில் குடும்பத்தினர் சூழ்ந்து நிற்கையில் மரணமடைந்தார்.
ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் உலோகம் மற்றும் அறிவியல் பொருண்மம் இலாகாவில் 1967ல் சேர்ந்த முதல் பெண்மணியாவார்.
1989ல் இளைப்பாறிய போதிலும் இன்னமும் பல்கலைக்கழக பேராசிரியர் என்ற பட்டத்தை தக்கவைத்துக் கொண்டவர்.
இவர் பொருண்ம அறிவியலாளர் மற்றும் ஒரு உலோகம் சம்பந்தமான ஆராய்ச்சி போன்றனவற்றில் முக்கியத்துவம் பெற்றவராக இருந்ததுடன் தொழில் நுட்பத்தின் சமூகத்தாக்கம் குறித்து படித்து தொல்பொருளியல் துறையில் முன்னோடியாகவும் இருந்தார்.
அதுமட்டுமன்றி கனடிய கௌரவ அமைப்பில் தனித்துவம் மிக்க ஒரு உயர்நிலை அதிகாரி  எனவும் விருது {Order of Canada}, பெற்றவர். அத்துடன் கனடா அறிவியல் கவுன்சில் மற்றும் இயற்கை அறிவியல் கனடா பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றிலும் பணியாற்றினார். இவை மட்டுமன்றி மற்றும் பல அறிவியல் நிறுவனங்களிலும் பணியாற்றியவர்.
Franklin ஒரு அர்ப்பணிக்கப்பட்ட அமைதிவாதி பெண்ணியவாதி மற்றும் Canadian Voice of Women for Peace.ன் துணை நிறுவனருமாவார்.
“சமாதானம் போர் இல்லாததல்ல ஆனால் பயம் அற்றது” இவரது பிரபல்யமான மேற்கோள்களில் ஒன்றாகும்.
இவர் மியுனிச் ஜேர்மனியில் 1921 செப்ரம்பர் 16ல் பிறந்தவர். 1940ல் பேர்லின் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கையில் நாசி ஆட்சியில் {இவரது தாயார் யூதர்]கைது செய்யப்பட்டு 18மாதங்கள் சிறையில் இருந்தவர். விடுதலையான பின்னர் தனது பட்டப்படிப்பை முடித்து முதல் தடவையாக ரொறொன்ரொ பல்கலைக்கழகத்தின் post-doctoral மாணவியாக கனடா வந்தார்.இவருக்கு இரண்டு பிள்ளைகளும் பல பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

Dr. Ursula Franklin, a University of Toronto physicist and member of the executive of the voice of women, said in Ottawa July 23, 1970, that money spent by Canada on warfare research could be better spent on environmental research. Dr. Franklin said Canada should get out of co-operative CBW defence research with the U.S., United Kingdom and Australia. (CP PHOTO/Chuck Mitchell)

scienscien2

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News