Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானை பழி தீர்த்த இங்கிலாந்து: 2வது டெஸ்டில் 330 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

July 25, 2016
in News, Sports
0
பாகிஸ்தானை பழி தீர்த்த இங்கிலாந்து: 2வது டெஸ்டில் 330 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

பாகிஸ்தானை பழி தீர்த்த இங்கிலாந்து: 2வது டெஸ்டில் 330 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 330 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அணித்தலைவர் குக் (105), ஜோ ரூட் (254) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 8 விக்கெட் இழப்புக்கு 589 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸின் (4) அபார பந்துவீச்சில் 198 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

அணித்தலைவர் குக் 76 ஓட்டங்களுடனும், ஜோ ரூட் 71 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் பாகிஸ்தான் அணிக்கு 565 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

4வது நாள் ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வரிசை வீரர்கள் ஏமாற்றினர். அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 234 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 330 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ஹபீஸ் 42 ஓட்டங்களும், சபீக் 39 ஓட்டங்களும், மிஸ்பா 35 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பில், ஆண்டர்சன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இதன் மூலம் லாட்ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றிக்கு பதிலடி கொடுத்துள்ளது இங்கிலாந்து அணி.

இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சம நிலையில் உள்ளனர்.

Previous Post

இலங்கை த‌மிழ் மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி – 2016!

Next Post

சுவிஸில் நடக்கும் தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா

Next Post
சுவிஸில் நடக்கும் தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா

சுவிஸில் நடக்கும் தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

ஊழல் மோசடி வலைக்குள் சிக்கியுள்ள என்.பி.பி உறுப்பினர்கள்

November 16, 2026
சாதனை படைக்கும் நடிகர் கே.மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் பாடல்

சாதனை படைக்கும் நடிகர் கே.மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் பாடல்

November 16, 2026
விஜய்யின் செல்லத் தங்கை ‘அரிசி மூட்டை’ புவனாவுக்கு திருமணம்!

விஜய்யின் செல்லத் தங்கை ‘அரிசி மூட்டை’ புவனாவுக்கு திருமணம்!

November 15, 2026
பங்களாதேஷை அதிரவைத்த பாகிஸ்தான், SAFF சம்பியன்ஷிப் இறுதியில் இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது

பங்களாதேஷை அதிரவைத்த பாகிஸ்தான், SAFF சம்பியன்ஷிப் இறுதியில் இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது

November 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures