சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய மூன்று முஸ்லிம் நபர்களுக்கு தலா 10 இலட்சம் ருபாய் பணப்பரிசு வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
அதேவேளை, குறித்த சந்தர்ப்பத்தில் உடனடியாக செயற்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

