தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்
அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த வேதாளம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் இன்னும் அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பிக்கவில்லை.
சத்யஜோதி நிறுவனத்திற்காக இவர் நடிக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் தயாரித்த தொடரி படம் அடுத்த மாதம் வரவிருக்கின்றது.
இப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார், இந்த படத்தின் வியாபாரம் மற்றும் ரிலிஸில் தற்போது பிஸியாகவுள்ளார்களாம், அதனால், தான் இன்னும் தல-57 தொடங்காமலேயே உள்ளது என கூறப்படுகின்றது.