கோபா அமெரிக்கா கால்பந்து: மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அர்ஜென்டினா அபார வெற்றி

கோபா அமெரிக்கா கால்பந்து: மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அர்ஜென்டினா அபார வெற்றி

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் லயோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோலால் அர்ஜென்டினா அணி 5-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி 3 கோல்களை 19 நிமிடங்களில் அடித்து அசத்தினார்.

ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் டி மரியா அடித்த ப்ரீகிக்கை தலையால் முட்டி கோலாக மாற்றினார் நிக்கோலஸ் ஒடாமெண்டி. இதனால் முதல் பாதி யில் அர்ஜென்டினா 1-0 என முன் னிலை வகித்தது. 61-வது நிமிடத் தில் அகஸ்டோ பெர்னாண்டஸுக்கு மாற்று வீரராக நட்சத்திர வீரர் லயோ னல் மெஸ்ஸி களமிறக்கப்பட்டார். அடுத்த 7-வது நிமிடத்தில் அவர் கோல் அடித்து அசத்தினார்.

68-வது நிமிடத்தில் கொன்சாலோ ஹிகுவெயின் அடித்த பந்து, பனாமா தடுப்பு வீரர் ஹென்ரிக்ஸ் மீது பட்டு திரும்பி வந்தது. இதை சரியாக பயன்படுத்தி எளிதாக கோலாக மாற்றினார் மெஸ்ஸி. ஆனால் அவர் அடுத்த கோலை அடித்த விதம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 78-வது நிமிடத்தில் 25 அடி தூரத்தில் கர்லிங் ப்ரீகிக் மூலம் அசத்தலாக தனக்கே உரிய பாணி யில் கோல் அடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார் மெஸ்ஸி.

87-வது நிமிடத்தில் பனாமா வீரர்களின் தடுப்புகளை மீறி 15 அடி தூரத்தில் இருந்து ஹாட்ரிக் கோலை மெஸ்ஸி அடித்தார். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மெஸ்ஸியின் நீண்ட தூர பாஸை ரோஜோ தலையால் முட்ட அதனை கோல்கம்பத்தின் அருகே நின்ற அகிரோ கோலாக மாற்றினார்.இந்த வெற்றியின் மூலம் அர்ஜென் டினா காலிறுதிக்கு முன்னேறியது.

சிலி வெற்றி

டி பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சிலி 2-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News