Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குண்டு வெடிப்பு விடயங்களை கண்டறிவதற்காக விசேட ஆணைக்குழு

May 1, 2019
in News, Politics, World
0

2019 ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பிலான விடயங்களை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால்
நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு ஏப்ரல் 22ஆம் திகதி முதல் தனது
செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

இவ் விசேட விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித்
கே.மலல்கொட செயற்படுவதோடு, அதன் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற பொலிஸ்மா
அதிபர் என்.கே.இலங்ககோன் மற்றும் ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன
ஆகியோர் செயற்படுகின்றனர்.

குறித்த விசாரணை ஆணைக்குழுவினால் இதுவரையில் பல உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளின்
வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி
பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரும் அவர்களுள்
அடங்குகின்றனர்.

மேலும் பல நபர்களின் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதோடு, இது தொடர்பிலான
தமது கருத்துக்களையும் தகவல்களையும் விசேட விசாரணை ஆணைக்குழுவிற்கு
தெரிவிக்குமாறு பிரபல செய்திப் பத்திரிகைகள் பலவற்றில் ஏப்ரல் 25ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட
அறிவித்தலின் ஊடாக பொதுமக்களிடமும் நிறுவனங்களிடமும் கோரப்பட்டுள்ளது.

அவ்வாறு தகவல்களை தெரிவிப்பதற்கு விருப்பமற்றவர்கள் எழுத்து மூலமாக குறித்த
தகவல்களை விசேட விசாரணை ஆணைக்குழுவின் செயலாளருக்கு

த.பெ.இல. 2306,
கொழும்பு – 01 என்ற முகவரிக்கோ

அல்லது
தொலைநகல் இல. 011 2100446 ஊடாகவோ

அல்லது
[email protected] என்ற மின்னஞ்சல் ஊடாகவோ
அனுப்பி வைக்குமாறு விசேட விசாரணை ஆணைக்குழு தயவுடன் கேட்டுக்கொள்கின்றது.

Previous Post

மூடியுள்ள வீடுகளையும் சோதனையிட இராணுவத்துக்கு அதிகாரம் வேண்டும்- காதினல்

Next Post

மஸ்ஜித்களில் இருந்த வாள்கள் மையவாடியை சுத்தம் செய்ய பயன்படுத்தபட்டவை

Next Post

மஸ்ஜித்களில் இருந்த வாள்கள் மையவாடியை சுத்தம் செய்ய பயன்படுத்தபட்டவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures