இளம்பெண் ஒருவரின் ஆடையை கிழித்து அவரை அவமானம் செய்த மூன்று இளைஞர்களுக்கு கென்யா நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த 2014ம் ஆண்டு, பேருந்தில் இளம் பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள்
‘இப்படி கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்தால், உன்னை பார்க்கும் ஆண்களுக்கு கற்பழிக்கவே தோன்றும்’ எனக் கூறி அவரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர். பின்னர் அவரின் ஆடைகளை கிழித்து அவரை அவமானம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அந்நாட்டு பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆகையால் அந்நாட்டு பெண்கள்
‘என் ஆடை.. என் விருப்பம் என முழக்கமிட்டு போராட்டங்களை நடத்தினர். மேலும் அந்த மூன்று வாலிபர்களுக்கும் கடுமையான தண்டனையை அரசு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த வழக்கு கடந்த 3 வருடங்களாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, பெண்ணின் ஆடையை கிழித்த 3 வாலிபருக்கு மரண தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். கென்யா நாட்டில் இதுபோன்ற குற்றத்திற்கு மரண தண்டனை அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.