இதுதான் நான் 34: வெற்றிக்கு முகம் தேவையில்லை!

இதுதான் நான் 34: வெற்றிக்கு முகம் தேவையில்லை!

 

 ‘காதலன்’படத்தில் வரும் ‘முக் காலா’ பாட்டோட முதல் நாள் ஷூட்டிங்லேர்ந்து கடைசி நாள் ஷூட்டிங் வரைக்கும் என் காலில் அப்படி ஒரு வலி. அது ரொம்ப அதிக மாயிட்டிருந்த நேரத்திலதான் பாட்டோட கடைசியில் வரும் மியூசிக் போர்ஷனை எடுக்க ஆரம்பிச்சாங்க. அதுக்காக என்னோட கால்கள்ல கிரீன் துணியைக் கட்டினாங்க. அப்போ, எதுக்கு அதை கட்டுறாங்கன்னும் தெரியலை. அப்புறம் தான் அந்த கிரீன் துணி இருக்கும் இடத்தை கிராஃபிக்ஸ்ல அழிச்சுடு வாங்கன்னு புரிஞ்சுது. அந்த சமயத்துல தான் சினிமாவுல கிராஃபிக்ஸ் வேலைகள் கொஞ்சம் கொஞ்சமா வரத் தொடங்கி யது.

அதே மாதிரி கைகள்லேயும் கிரீன் துணி கட்டினாங்க. அதோட ஆட வேண்டி யதுதான்னு இருந்தப்போ, அடுத்து மொத்த முகத்துலேயும் அந்த கிரீன் துணியை சுத்த ஆரம்பிச்சுட்டாங்க. என்னால மூச்சு கூட விட முடியலை. ஜல்லிக்கட்டுல மாட்டை அவுத்துட்டா எப்படி பறக்கும்? அந்த மாதிரிதான் ஷாட் ரெடியானதும் வலியோட எதையும் பார்க்க முடியாம ஆட ஆரம்பிச்சேன். சுத்தி இருந்தவங்க எல்லாரும் நல்லா இருந்ததா சொன்னாங்க. பாட்டு முழுசா ரெடியானதும்தான் நான் பார்த்தேன். பேண்ட், தொப்பி, ஷூஸ், கோட் இதெல் லாம் தனித் தனியா ஆடுவதைப் பார்த்தப்போ நல்லா இருந்துச்சு. சாதாரணமா கஷ்டப்பட்டு வேலை பார்த்து அதுக்கு பாராட்டு கிடைக்குறப்ப வலி பறந்துடும்னு சொல்வாங்க. இதுலதான் அதை நான் பர்ஸ்ட் டைம் அனுபவிச்சேன். வலிச்ச காலும், வலியை தாங்கின முகமும் மறைஞ்சு போச்சு. வலியும் பறந்து போச்சு!

எப்போதுமே சினிமாவுல திறமைதான் முக்கியம். அழகுக்கோ, சிபாரிசுக்கோ இங்கே இடமே கிடையாது. அதை நான் ‘முக்காலா’ பாட்டுல முழுமையா உணர்ந் தேன். பாட்டோட கடைசியில வர்ற அந்த ‘பிட்’ உலகம் முழுக்க ஃபேமஸ் ஆச்சு. அன்றைக்கு என்னோட முகம் யாருக்குமே தெரியாது. ஆனா, அந்த மூவ்மெண்ட்டுக்கு இந்தியா முழுக்க விசில், கைதட்டல்னு குவிஞ்சுது. அப்போ தான் வெற்றிக்கு முகம் தேவையில்லை. திறமை மட்டும் இருந்தா போதும்னு நினைச்சேன். இது சினிமாவுக்கு மட்டு மல்ல; எந்தத் துறையில வேணும்னாலும் நிரூபிக்கலாம். அன்றைக்கு அந்தப் பாட்டுல நான் ஆடாம, வேறு யார் ஆடியிருந்தாலும் நிச்சயம் அது ஹிட் அடிச்சிருக்கும்! காரணம், அதோட ஐடியாதான். எனக்கு அது அமைஞ்சது காட் கிஃப்ட்!

‘முக்காலா’ பாட்டு ஹிட் ஆனதும் உடனே அதை என்னோட தலைக்குக் கொண்டுபோகலை. அந்த ஆட்டத்தை கொடுத்த காலுக்கும் அதை கொண்டு போகலை. அடுத்தடுத்த படங்கள்னு ஓட ஆரம்பிச்சுட்டேன். ‘எப்படி சார் ஆடு றீங்க?’ன்னு கேட்பாங்க. இப்போ வரைக் கும் ஏதோ பண்றோம்கிற மனநிலையில தான் இருக்கேன். டைரக்டர், நடிகர்னு ஆனபிறகு தினமும் ஆடுற பழக்கம் எல்லாம் விட்டுப்போச்சு. நான் டான்ஸை மறக்கலைன்னு சொல்றதைவிட என் காலும், கையும், உடம்பும் மறக்காம இருக்கு. அதுதான் இப்பவும் என்னை எனர்ஜியோட இருக்க வைக்குது!

‘காதலன்’ படத்துல எந்த அளவுக்கு டான்ஸ்ல வேலை இருந்துச்சோ, அதே அளவுக்கு ஃபைட்லயும் மெனக்கெட வேண்டியிருந்துச்சு. காலேஜ் பின்னணி யில ஃபைட் ஒண்ணு. ஓடிக்கிட்டிருக்குற ஜீப்ல ஏறி அந்தப் பக்கம் குதிச்சி சண்டை போடுற மாதிரி ஒரு காட்சி. நானும் செஞ்சேன். அன்றைக்கு ஷூட்டிங் முடிச்சுட்டு போய் வீட்ல படுத்தா என்னால அந்தப் பக்கம் இந்தப் பக்கம்னு அசையக் கூட முடியலை.

பொதுவா, பலரும் காலையில எழுந்திருக்கும்போது சோம்பல் முறிச்சு, கண் சிமிட்டி, உடம்புக்கு சின்னச் சின்ன மூவ்மெண்ட் கொடுத்த பிறகுதான் எழுந்திருப்பாங்க. நான் எப்ப வுமே அப்படி எழுந்திருக்க மாட்டேன். வீட்ல அம்மா, ‘‘டேய் பிரபு!’’ன்னு கூப்பிட்டதும் நான் டப்புன்னு எழுந்து நடந்து போய்ட்டே இருப்பேன். எவ்வளவு தூக்கத்துல இருந்தாலும் ரொம்ப நேரத் துக்கு முன்னாடி எழுந்திருச்ச மாதிரி எழுந்து நடக்க ஆரம்பிச்சுடுவேன். அதுதான் என்னோட இயல்பு. அப்படி செய்றதை வழக்கமா வெச்சிருக்குற என்னால, ‘காதலன்’ நேரத்துல காலை யில எழுந்திருக்கிறப்ப கண்ணை திறந்துகூட பார்க்க முடியலை. ஷூட்டிங் முடிஞ்சு வீட்ல வந்து ஒரு பொசிஷன்ல படுத்தேன்னா அதே பொசிஷன்லதான் கிடப்பேன். கொஞ்சம் திரும்பினாக் கூட வலி பின்னிடும்.

அடுத்து படத்தோட டப்பிங். ஏற் கெனவே ‘இந்து’ படத்தோட டப்பிங் அனுபவம் என்னன்னு உங்கக்கிட்ட சொல்லியிருக்கேன். அதுல கஷ்டப்பட்டு டப்பிங் பேசியிருந்தேன். ‘காதலன்’ படத்துக்கு குரல் மெச்சூரிட்டியா வேணும் கிற லெவல்ல இருந்துச்சு. ஒரு வழியா டப்பிங் வேலைகள் முடிந்தது. படமா பார்த்தப்போ, ‘என்னது என்னோட வாய்ஸ் இவ்ளோ நல்லா இருக்கே!’’ன்னு பக்கத்துல இருந்தவங்கக்கிட்ட கேட் டேன். அதுக்கு அவங்க, ‘‘உங்களுக்கு நடிகர் விக்ரம் சார்தான் டப்பிங் கொடுத் தார்!’’னு சொன்னாங்க. ‘அதான் நல்லா இருக்கு!’ன்னு நினைச்சுக்கிட்டேன். டப்பிங் பெரிய கலை. காமெடின்னா வாய்ஸும் காமெடியா இருக்கணும். எமோஷன்னா நாமும் எமோஷனலா ஆகி டணும். அழறதுன்னாலும் அப்படித்தான்!

பெரிய அளவுல செலவு பண்ணி எடுத்தப் படம் இது. எனக்குத் தெரிஞ்சு அந்த நேரத்துல, புதுசா நடிக்கிற ஒரு ஹீரோவுக்கு இந்தப் படத்துல செலவு செஞ்ச மாதிரி மத்த யாருக்கும் செஞ்சிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அப்படி ஒரு லெவல்ல படம் ரெடியாச்சு. ஆச்சி மனோரமா, அல்லு ராமலிங்கம் சார் மாதிரியான பெரிய ஆளுங்க கூட நடிக்கிற வாய்ப்பு அமைஞ்சது. அப்பா, ராஜூகூட இந்தப் படத்தில் வேலை பார்த்தாங்க. இப்படி எனக்கு பல விதத்துல நல்ல வைப்ரேஷன் கொடுத்த படம்னே சொல்லலாம். ‘இந்து’ படம் முடிச்சப்போ நாம இனிமே தொடர்ந்து ஹீரோவா நடிக்கப் போறோமான்னு மனசுல தோணியதே இல்லை. ஆனா, ‘காதலன்’ படத்தப்போ இனிமே தொடர்ந்து நாம ஹீரோவா நடிக்கப் போறோம்கிறது எனக்குத் தெரிஞ்சது. அதே மாதிரி ஒரு நடிகனா நான் பிஸியாகவும் ஆரம்பிச்சேன்.

இப்பவும் நான் சந்திக்கிற சில பேர் என்கிட்ட, ‘‘சார் ரொம்ப கஷ்டப்படுறேன். ஆனா, லைஃப்ல ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது!’’ன்னு ஃபீலிங்கோட சொல்வாங்க. அவங்களுக்கு நான் சொல்றது என்னன்னா… முயற்சியை மட்டும் விட்டுடவே கூடாது. யாராவது ஒருத்தர் நம்மோட திறமையைக் கவனிச்சிட்டிருப்பாங்க. இன்னைக்கு வரைக்கும் நான் அதே மாதிரி பார்க்கப்படுறேன்னா, அதுக்கு காரணம் அப்போ கொஞ்சம் கொஞ்சமா வேலை பார்த்து சேர்த்து வெச்ச பேருதான். திடீர்னு ஒருநாள் எல்லார் முன்னாலயும் வந்து நிக்கலை. கிரிக்கெட்ல எப்படி ஒண்ணு, ரெண்டுன்னு சேர்த்து ஒரு கட்டத்துல ரெக்கார்டுன்னு மாறுதோ அதே மாதிரிதான் லைஃபும். முயற்சியில இருக்கும் எல்லாருக்குமே வெற்றி கண்டிப்பா கிடைக்கும்.

இப்படி ஓடி வந்துட்டிருக்கிற எனக்கு இப்பவும் ரெண்டு விஷயத்துக்காக யாரை பார்த்தாலும் பிரமிப்பா தெரியும். அது என்னன்னு அடுத்த வாரம் சொல்றேனே!

– இன்னும் சொல்வேன்…

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News