Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அப்பாவிகளை கொலைசெய்வது வீரமல்ல: அருட்தந்தை ஜோய் மரியரட்னம்

April 28, 2019
in News, Politics, World
0

இறைவனின் அருளைப் பெறவந்த அப்பாவி பக்தர்களின் உயிர்களை பறிப்பது வீரமும் இல்லை. நியாயமும் இல்லை. அதுவும் கடவுள் பெயரால் உயிர்களை பறிப்பது கண்டனத்திற்கு உரியது என அருட்தந்தை ஜோய் அரியரட்னம் தெரிவித்தார்.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலையடுத்து, இன்று  தேவாலயத்தின் முன்பாக பக்தர்கள் கூடியிருந்து கண்ணீர் மல்க பிரார்த்தித்தனர்.

இதன்போது எமது ஆதவன் செய்திப்பிரிவிற்கு கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்த அருட்தந்தை இவரே.

அவர் எம்மிடம் தொடர்ந்து தெரிவித்ததாவது, எந்த மதத்திலும் இன்னொருவரை கொல்லுமாறும் வேதனையை ஏற்படுத்துமாறும் கூறவில்லை. அப்படியிருக்கையில் உயிரை பறிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஓரளவுக்கு திருப்பலிகளை ஒப்புக்கொடுக்க முடியுமென எதிர்பார்ப்பதாகவும் அருட்தந்தை தெரிவித்தார்.

Previous Post

இலங்கை அரசு தமிழர்களுக்காக ஏன் சர்வதேசத்திடம் உதவி கோரவில்லை?

Next Post

இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது

Next Post

இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures