Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அடுத்தடுத்து முக்கிய நாடுகளுக்கு பறக்கும் ஜனாதிபதி அநுர!

August 13, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
16ஆவது தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் – ஜனாதிபதி பங்கேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதலில் ஜனாதிபதி நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச் சபை (UNGA) கூட்டத்திற்காக அமெரிக்காவிற்கும், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கருத்து வெளியிட்ட வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், “ஜனாதிபதி செப்டம்பர் 23 ஆம் திகதி அமெரிக்காவிற்குப் புறப்பட்டு, 24 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுவார்.

உலகத் தலைவர்களுடன் சந்திப்பு

அதன்போது, வெளியுறவுக் கொள்கை உட்பட அரசாங்கத்தின் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுவார்.மேலும் அவர் பல உலகத் தலைவர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து முக்கிய நாடுகளுக்கு பறக்கும் ஜனாதிபதி அநுர! | President Anura To Two Foreign Trips In September

நியூயார்க்கிலிருந்து, ஜனாதிபதி திசாநாயக்க செப்டம்பர் 27 அன்று ஜப்பானின் ஒசாகாவிற்கு எக்ஸ்போ 2025 இல் கலந்து கொள்ளவும், இலங்கை தினத்தில் பங்கேற்கவும் பயணம் செய்வார், அங்கு நாட்டின் கலாச்சாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்துவார்.

பின்னர் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், ஜப்பானுக்கான அரசு முறைப் பயணம் செப்டம்பர் 28 ஆம் திகதி தொடங்கும்.” என்றார்.

Previous Post

ராகவா லோரன்ஸ் – எல்வின் இணைந்து மிரட்டும் ‘புல்லட் ‘ படத்தின் டீஸர் வெளியீடு

Next Post

ரணில் இன்று வெளியிட உள்ள விசேட அறிக்கை

Next Post
ஜே.வி.பியின் கடந்த காலத்தை தூசு தட்டும் ரணில்! 

ரணில் இன்று வெளியிட உள்ள விசேட அறிக்கை

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures