பாலா இயக்கிய நான் கடவுள் படத்தின் கதை கரு அஹம் பிரமாஸ்மி என்பதாகும். தற்போது இதே தலைப்பில் 5 மொழிகளில் படம் தயாராகிது. பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் தயாரித்து நடிக்கிறார். ஸ்ரீகாந்த் என்.ரெட்டி இயக்குகிறார். சன்னி குருபாதி ஒளிப்பதிவு செய்கிறார். அச்சு தமிழ்மணி, ரமேஷ் தமிழ் மணி இசை அமைக்கிறார்கள்.
இது ஆன்மீகம் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது. தற்போது படத்தின் பர்ஸ்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஐதராபாத்தில் இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது. மற்ற நடிகர் நடிகைகள் விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது. 2005ம் ஆண்டு கன்னடத்தில் இதே பெயரில் ஒரு படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

