நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு போனி கபூர் தயாரிப்பில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போனி கபூரின் மனைவி நடிகை ஸ்ரீதேவியின் 2ம் ஆண்டு நினைவு தினம் கடந்த மாதம் 24ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள போனி கபூரின் வீட்டில் இன்று ஸ்ரீதேவியின் நினைவு தினத்தையொட்டி திதிக்கொடுக்கப்பட்டது. இதில் நடிகர் அஜித் கலந்துகொண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்தினார்.
அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
