96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானுவில் திரிஷா வேடத்தில் நடித்திருந்த சமந்தாவின் நடிப்புக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ஆனபோதும் படம் தோல்வியடைந்ததால், தனது படத்திற்கு சமந்தாவை ஒப்பந்தம் செய்திருந்த அஜய் பூபதி என்ற இயக்குனர் அவருக்குப் பதிலாக இப்போது காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம், சைக்கோ படங்களில் நடித்த அதிதி ராவ்வை நடிக்க வைக்கிறார்.
இந்த செய்தி வெளியானதை அடுத்து, ஜானு படத்தின் தோல்வியினால் தான் சமந்தா நீக்கப்பட்டுள்ளார் என்று தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, அதிதிராவ் சமூகவலைதளத்தில், ஒரு படத்தின் வெற்றி தோல்வி என்பது ஒரு நட்சத்திரத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை கெடுத்து விடாது. அதனால் இந்த விசயத்தை பெரிதாக்க வேண்டாம். இயக்குனர், தயாரிப்பாளர்கள் தேர்வு செய்யும் நட்சத்திரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

