இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தினருக்கு நேற்று இரவு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு மற்றும் இந்தியாவிலுள்ள சில மாநில முதல்வர்களும், தொழில் அதிபர்களும் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் பங்கேற்றார். அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டிரம்பிற்கு ரஹ்மானை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
‛‛ராஷ்டிரபதி பவனில் எங்கள் ஹீரோக்களில் ஒருவர்(அப்துல் கலாம்) இந்த ஒரு சிறப்பு சந்தர்ப்பத்திற்காக ஜனாதிபதியின் அன்பான அழைப்பிற்கு மிக்க நன்றி” என ரஹ்மான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

