தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ‘ஜானு’ தெலுங்குப் படம் எதிர்பாராத அளவில் படுதோல்வி அடைந்தது. தமிழில் விஜய் சேதுபதி, நயன்தரா ஆகியோருடன் ‘காத்து வாக்குல ஒரு காதல்’ படத்தில் நடிக்க உள்ளார் சமந்தா.
இந்நிலையில் ஐதராபாத்தில் சர்வதேச தரத்தில் குழந்தைகளுக்காக ‘டே கேர்’ சென்டர் ஒன்றை ஆரம்பித்துள்ளார் சமந்தா. அதன் துவக்க விழாவில் கலந்து கொண்ட சில பிரபலங்கள், சமந்தாவிடம் எப்போது நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் விளையாடுவீர்கள் எனக் கேட்டுள்ளார்கள். அவர்கள் அப்படிக் கேட்ட கேள்வி சமந்தாவை சங்கடப்படுத்தியிருக்கிறது. அதனால் அவர்களைத் தவிர்த்துவிட்டு வேறு பக்கம் சென்றுவிட்டாராம்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சினிமாவில் நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் சமந்தா. அதன்பின்தான் குழந்தை பெற்றுக் கொள்வார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்களாம்.

