‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. அந்த புகழை, பிரபலத்தை அவர் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பது வேறு கதை. இருந்தாலும் டுவிட்டர் தளத்தில் அடிக்கடி ஓவியா எதையாவது பதிவிட்டு தனது ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மிகவும் ஷார்ட் ஆக மாற்றிவிட்டார் ஓவியா. அது பற்றி ஒரு ரசிகர், “இந்த ஹேர் ஸ்டைலை வச்சிட்டு ஒரு கடை திறக்க போக முடியுமா, இல்ல கூப்புடுவாங்களா,” எனக் கிண்டலடித்திருந்தார்.
அதற்கு அதிரடியான பதில் ஒன்றை அளித்துள்ளார் ஓவியா. “எனது ரசிகர்கள் தலைவர்களாக வேண்டும் என விரும்புகிறேன். கவலைப்படாதீங்க, நான் விக் வச்சிக்கிறேன். என்னுடைய மூளையை வளர்க்கத்தான் விரும்புகிறேன், முடியை அல்ல. எனது முடி, எனது தோல், எனது பாலினம் ஆகியவை முக்கியமல்ல அன்பரே. நான் எப்போதுமே சுதந்திரமான எண்ணம் உடையவள். நாம் அனைவருமே அழகானவர்கள்,” எனக் கூறியுள்ளார்.

