நடிகை சமந்தா சினிமாவில் நடித்துக் கொண்டு பிரதியுஷா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திலும் இணைந்து சமூகசேவையாற்றி வருகிறார். கடந்த ஓர் ஆண்டாகவே ஆந்திராவிலுள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு பள்ளி தொடங்க வேண்டும். அதன்மூலம் தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டு வந்தார்.
அதையடுத்து ஷில்பா ரெட்டி, முக்தா குரானா ஆகியோருடன் இணைந்து அந்த பள்ளி தொடங்கும் வேலைகளை தொடங்கிய சமந்தா வருகிற பிப்ரவரி 22-ந் திகதி அந்த பள்ளியின் திறப்பு விழாவை நடத்துகிறாராம். இதையடுத்து தனது ஓராண்டு கனவு இப்போது நனவாகப் போகிறது என்று தெரிவித்துள்ளார் சமந்தா.

