பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படம் ‛கர்ணன்’. இதில் தனுஷ் நடித்து வருகிறார். தாணு தயாரிக்கிறார். இந்தப் படம் திருநெல்வேலி பகுதியில் இப்போதும் நிலவி வரும் ஜாதிய பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாகிறது. இதன் படப்பிடிப்புகள் திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கிறது.
இந்நிலையில் திருநெல்வேலி பகுதியில் நேற்று ஒரு வாட்ஸ்-அப் வீடியோ வெளியானது. அதில் சீவலப்பேரி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் தோன்றி தனுசுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். “எங்கள் சமுதாயத்தை பற்றி அவதூறாக படம் எடுத்தால் உங்கள் தலை இருக்காது.
வெட்டி கொலை செய்வோம்” என்று பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார். வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீசார் தேடி வருகிறார்கள்.

