நடிகை சனம் ஷெட்டியும், பிக்பாஸ் புகழ் தர்ஷனும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நிச்சயதார்த்தமும் நடந்தது. தர்ஷனை ஹீரோவாக்க சனம் ஷெட்டி ஒரு படமே தயாரித்தார். இந்த நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்நிலையில் சனம் ஷெட்டி தன்னை ஒழித்துக்கட்ட முயற்சித்ததாக தர்ஷன் புதிய குற்றச்சாட்டு ஒன்றை கூறி உள்ளார்.
தர்ஷன் தனது இன்ஸ்ட்ராகிராமில் எழுதியிருப்பதாவது: சில உறவுகள் தோல்வி அடைவதற்கு என்ன காரணமாக இருந்தாலும், அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவர் அல்லது இருவருக்கு மகிழ்ச்சி இல்லை என்றால் பிரச்னை சிக்கலாவதற்குள் சுமுகமாக பிரிவதுதான் தீர்வாக இருக்கும். மகிழ்ச்சியில்லாத உறவை தொடர்வது சரியல்ல.
அந்த நபர் மீது (சனம் ஷெட்டி) மரியாதை வைத்திருந்தேன். ஆனால் எங்கள் உறவு ஆரோக்கியமானதாக இல்லை. அவர் என்னை ஒழிக்க முயன்றார். நான் காயப்பட்டேன். அவரது குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. எனது எதிர்காலத்தின் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன். இவ்வாறு எழுதியுள்ளார்.

