தான் நடிக்கும் மாஸ்டர் படத்துக்காக நடிகர் விஜய் பாடியிருக்கும் ஒரு குட்டிக் கதை பாடல் வெளியான அதே நேரத்தில், அதே நாளில் இரும்பு மனிதன் படத்துக்காக நடிகர் சிம்பு பாடிய டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ பாடலும் வெளியாகி இருக்கிறது. இரு பாடல்களும் சமூக வலைதளங்களில் ட்ரண்ட் ஆகி இருக்கிறது.
சிம்பு பாடியிருக்கும் அந்த புள்ளிங்கோ பாடல்:
“டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ
தெளிவா நில்லுங்கோ
சேலஞ்சே இல்லாட்டி
லைஃபே போரு-ங்கோ
துட்டெல்லாம் போனாலும்
தூசா ஆனாலும்
நம்பிக்கை விடாம
வாழ்ந்து பாருங்கோ” என்ற வரிகளுடன் அமைந்திருக்கிறது சிம்பு பாடிய பாடல். இந்தப் பாடலும் முழுக்க முழுக்க அட்வைஸ் ரகம் தான்.
இந்தப் பாடலுக்கு நிறைய ரசிகர்கள், சமூக வலைதளம் மூலம் தங்களுடைய கருத்துக்களை பாராட்டாக தெரிவித்திருப்பது, தொடர்ந்து இதே மாதிரியான பாடல்களைப் பாட உற்சாகம் அளித்திருக்கிறது என நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.

