வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த ‘அசுரன்’ படம், நல்ல வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. அந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ், மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் பிரியாமணி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் அனந்தப்பூர் மாவட்டத்தில் ஆரம்பமானது. அதற்கடுத்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி அருகில் உள்ள குறுமலை என்ற இடத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ‘அசுரன்’ படப்பிடிப்பு நடந்த சில இடங்களில் ‘நாரப்பா’ படத்திற்கான சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் படமாக்கி வருகிறாராம். அதன்பின் மீண்டும் அனந்தப்பூரில் படமாக்க உள்ளார்களாம்.
கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

