பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற தர்ஷன், தற்போது காதல் பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றார்.
பிரபல நடிகை சனம் ஷெட்டியைக் காதலித்து, நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தான் பிக்பாஸ் சென்றிருக்கின்றார் என்பது தற்போது தான் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் சென்ற பின்பு தர்ஷன் புகழின் உச்சத்திற்கு சென்றார். இந்நிலையில் இவர் காதலித்து நிச்சயதார்த்தம் செய்த சனம் சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டினை வைத்துள்ளார்.
தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், 15 லட்சம் வரை செலவு செய்ததாகவும், மனதளவில் தன்னை அதிக தொந்தரவு செய்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இதற்கு நேற்றைய தினத்தில் தர்ஷன் ஆதாரத்துடன் விளக்கமும் கொடுத்தார்.
இந்நிலையில் தர்ஷனின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டு அனைத்து சடங்குகளையும் செய்த பிக்பாஸ் ரம்யா மற்றும் அவரது கணவர் சத்யா, தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டியைக் குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பிக்பாஸ் செல்வதற்கு முன்பே இவர்கள் இருவரும் பயங்கரமாக சண்டையிட்டுக்கொள்வார்கள் என்று கூறிய ரம்யா ஒரு தருணத்தில் தர்ஷனின் டாக்குமெண்டை கிளித்தும் அவரது போனை சுக்குநூறாக உடைத்தும் போட்டிருந்தார்.
இருவருக்குள்ளும் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லை என்றும் தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியினை விட்டு வெளியேறிய பின்பு மிகவும் சென்சிட்டிவாக இருக்கின்றார் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி பிக்பாஸ் சென்று வந்த பின்பு பணம், புகழ் இதனால் அவருக்குள் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை.
சனம்ஷெட்டி தங்களிடம் கூறுகையில், தர்ஷன் 4 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தான் குறுந்தகவல் அனுப்பியதாகவும், சில நாட்களுக்குப் பின்பு இரண்டு லட்சம் பணம் வந்துவிட்டது என்று தர்ஷனிடம் தெரிவித்துவிடுங்கள் என்று கூறியதாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தர்ஷன் சனம் ஷெட்டியை ஒருபோதும் கைநீட்டி அடித்தது இல்லை என்றும் ரம்யா மற்றும் கணவர் சத்யா கூறியுள்ளனர்.

