6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வி.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம்”பாம்பாட்டம் “. வி.சி. வடிவுடையான் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் கதை ஹாரர் கலந்த திரில்லர் வகையைச் சாந்தது.
இப்படம் சம்பந்தப்பட்ட அறிவிப்பு வந்த நாளில் இருந்தே சினிமா இண்டஸ்ட்ரியல் படம் மீதான பாஸிட்டிவ் டாக் இருந்து வந்தது. தற்போது அதற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக ஒரு அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது. படத்தின் அதி முக்கியமான கேரக்டரில் நடிகை மல்லிகா ஷெரவர் நடிக்க இருக்கிறார் என்பதே அந்த அறிவிப்பு. தனது அழகாலும் நடிப்பாலும் ரசிகர் மனங்களை வென்றெடுத்த மல்லிகா ஷெரவத் இந்தி மார்க்கெட்டிலும் டாப் ஹீரோயின். பாம்பாட்டத்தில் நடிப்பதற்காக அவருக்கு பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல். மேலும் படத்தில் அவர் ராணி கேரக்டரில் தோன்ற இருக்கிறார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

