இந்தியாவின் முதல் டிரைலாஜி (3 நீண்ட நாவல்களின் கதைகளை உள்ளடக்கியது) படம் எனப்படும் பிரம்மாஸ்திரா படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு டிசம்பர் 04 ம் திகதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஹீரோ கதையான இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில், தொழில்நுட்ப பணிகள் காரணமாக ஓராண்டு தள்ளி போய் உள்ளது.
தர்மா புரோடெக்ஷன்ஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கி உள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், நாகர்ஜூனா, ஆலியா பட், மவுனி ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

