தெலுங்கு சினிமாவில் தற்போது மிக சிரமமான கட்டத்தில் இருக்கிறார் மாஸ் மகாராஜா என அழைக்கப்படும் ரவிதேஜா. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அவர் நடிபிள் வெளியான படங்கள் எதுவும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான டிஸ்கோ ராஜா படம் கூட ரவிதேஜாவுக்கு கைகொடுக்கவில்லை. கடந்த 4 நாட்களாக சுமாரான வசூல் தான் என்கிறது பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.
இந்நிலையில் தான் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் ரவி தேஜாவை, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒப்பந்தம் போட வேண்டியதுதான் பாக்கி என்கிறார்கள். ஆம்.. வெங்கடேஷ், வருண் தேஜ் இணைந்து நடித்த ‘எப்-2’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அல்லவா..? அந்த படத்தின் அடுத்த பாகமாக ‘எப்-3’ என்ற படத்தை தில் ராஜூ தயாரிப்பில் இயக்கவுள்ளார் இயக்குனர் அனில் ரவிபுடி. இந்த படத்தில்தான் ரவிதேஜாவை வில்லனாக நடிக்க வைகக இருக்கிறார்கள். கைவசம் படங்கள் எதுவும் பெரிதாக இல்லாத நிலையில் ரவிதேஜாவும் இதற்கு ஒப்புக்கொண்டு விட்டார் என்று சொல்லப்படுகிறது

